பூங்கன்று பேசுகிறது
பிள்ளைகளே,
என்னோடிருந்த உறவுகளை
கொடியவர்கள்
வெட்டிச்சரித்துவிட்டார்கள்
எனக்கும் உயிர் உண்டு
நாளை எனது முடிவு நிச்சயம்
ஏன் நீர் ஊற்றுகிறீர்கள்
உங்களுக்குள்ள உணர்வு
அவர்களுக்கு இருந்திருந்தால்
உறவுகளை வெட்டியிருப்பார்களா?