எம் மண்ணின் மைந்தர்கள் – பிருதிவிராஜ், குணநாதன் – வ.ஆ.அதிரூபசிங்கம்
எம் மண்ணின் – மைந்தர்கள்
தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ் விசாகப்பெருமாள் குணநாதன்
எம்மண் பெற்றெடுத்த மைந்தர்கள் இருவர் தாம்
எம்மண்ணைத் தாம்பிரிந்து விண்ணதனில் புகுந்தனரே
எம்மண்ணில் இற்றைவரை எம்முடன் இணைந்திருந்து
எம்மவருள் இருவராய் கூடிக் குழாவிக் குரல் கொடுத்தனரே
வயதில் மூத்தவளாய்த் தங்கேஸ்வரராசா பிருதிவிராஜ்
பிருதுவி அண்ணா ஒன்று பண்போடு அழைத்தப்பெற்றவர்
வயதில் இளையவனாய் விசாகப்பெருமாள் குணநாதன்
குணா அண்ணா என்று அன்புடனே அழைத்தப்பெற்றவர்
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் புகழ்பூத்தான் பிருதுவி
விளையாட்டின் தரம் வளர்க்கக் கழகத்தின் தூணானான்
வல்வை விளையாட்டிக் கழகத்தின் புகழ் சேர்த்தவன் குணா
விளையாட்டியத் தானாகி வெற்றிகள் படைத்தவன்
நெடியகாட்டு இளைஞர்தம் நிகழ்வுகள் இனிதெய்ய
துவளாமனத்துடன் துடிப்புடனே துணைநிற்பான் பிருதுவி
சிரித்தும் நிற்பான் சினம் கொண்டும் பார்ப்பான்
கடமைகளைக் கச்சிதமாய் முடித்திடக் கரம் கோர்ப்பான்
உதைப்பந்தாட்டம் என்றவுடன் உவகையுடன் ஆடிடுவான் குணா
உருளும் பந்தினைத் தன் காலால் சிராய் அடித்திடுவான்
“குணா” “குணா” என்றும் “குணாஸ்” என்றும் குரல் கொடுத்தே
களித்திடுவர் போட்டிகளைக் கண்டு களித்திருப்போர்
கவிதை ஆக்கம் – வ.ஆ.அதிரூபசிங்கம் B.A