இரவு நேரத்தில் கல்லூரிவளாகத்தினுள் சட்டவிரோதமாக பாரிய இயந்திரங்களுடன் நுழைந்த வட மாகாண சபை உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரை வல்வெட்டித்துறை மக்கள் பலவந்தமாக வெளியேற்றினர். இதனால அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
கூடை பந்து மைதானத்தை பாடசாலையினுள் அமைக்க கூடாது என்ற பாடசாலை அபிவிருத்தி சபை தீர்மானத்தை மீறி வடக்கு திரு சிவாஜிலிங்கம் மிகப் பழமை வாய்ந்த மரங்களை வெட்டி தள்ளினார். இது தொடப்ப்பில் கல்வி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இந்நிலையில் நேற்றிரவு பெக்கோ, டிப்பர் துணையுடன் வெட்டப்பட்ட மரங்களின் பக்கங்களை அப்புறப்படுத்தி மேடையை இடித்தகற்ற முயற்சித்தனர். இதனை கேள்வியுற்ற மக்கள் அங்கு திரண்டனர். அங்கு வந்த ஆசிரியர்கள் அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது இவ்வாறான வேலைகளுக்கு மேட்கொள்வதற்ட்க்கு எவருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்று அதிபர் பதிலளித்தார் இதனை அடுத்து சிவாஜிலிங்கம் உள்ளிடோர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
மரங்கள் முறிக்கப்பட்டதை ஆட்சேபித்து ஆறு ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர். இந்த பிரச்சினையை மேலிடத்துக்கு தெரிவித்துள்ளேன். அவர்கள் விசாரணையை முன்னெடுத்துள்ளார்கள். காவலாளியை வாயில்கதவை மூடுமாறு பணித்துள்ளேன் மீறி யாராவது உள் நுழைந்தால் போலீசில் முறைப்பாடு செயுமாறு பணித்துள்ளேன் என்று வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.