சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் உதவிச்செயலர் அலிஸ் வெல்ஸ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் உள்ளிட்ட அதிகாரிகளும், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசமும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.
அமெரிக்கா –சிறிலங்கா இடையிலான பரஸ்பர உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, கொழும்பு வந்துள்ள அலிஸ் வெல்ஸ் நேற்று சிவில் சமூகப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.
இன்று காலை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.