நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக, சீன கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான, ஹெபிங்பாங்சோ நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 178 மீற்றர் நீளமும், 24 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில், 381 மாலுமிகள் உள்ளனர்.
இந்தக் கப்பலில் ஒரு நவீன மருத்துவமனையில் உள்ள அறுவைச் சிகிச்சைக் கூடங்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகள், ஆலோசனை மருத்துவ சேவை, வதிவிட. மருத்துவ அலகுகள். மற்றும் கணினி மயப்படுத்தப்பட்ட சோதனைத் தொகுதிகள், 300 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
எந்த நேரத்திலும் நோயாளிகளை ஏற்றி வரவும், கொண்டு செல்லவும் உலங்குவானூர்தியை இறக்கும் வசதிகளும் இந்தக் கப்பலில் உள்ளன.
நான்கு நாட்கள் கொழும்பில் தரித்திருக்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து சிலநிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள சீன கடற்படையினர், வரும் 8ஆம் நாள், இலசவ மருத்துவ முகாம் ஒன்றையும் நடத்தவுள்ளனர்.
வரும் 9ஆம் நாள் இந்தக் கப்பல் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.