இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரித்தானி்ய நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார்.
தொழிற்கட்சி சார்பில், பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர், 47, 213 வாக்குகளைப் பெற்றார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரால், 9877 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
தங்கம் டெபோனயரின் தந்தை ஒரு இலங்கைத் தமிழர் என்பதும், அவரது தாயார் ஆங்கிலேயப் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.