Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » கொழும்பில் கல்லூரி நிதி ஒன்றரை கோடி முடக்கம். மாணவர்கள் தண்ணீருக்கு தவிப்பு!

கொழும்பில் கல்லூரி நிதி ஒன்றரை கோடி முடக்கம். மாணவர்கள் தண்ணீருக்கு தவிப்பு!

அண்மையில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கதால் மேற்கொள்ளப்பட்ட இயற்கை வள அழிப்பில் மாணவர்களுக்காக இலங்கை கல்வி அமைச்சினால் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கல் தொகுதியும் தரை மட்டமாக்கப்பட்டது. எனினும் மாகாண சபை கல்வி அமைச்சோ பழைய மாணவர் சங்கமோ இதுவரை குடிநீர் வழங்கல் தொகுதியை மீள் நிர்மாணம் செய்ய முன்வரவில்லை. குடிநீருக்கு மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள சிதம்பரா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் நிதியை கொழும்பில் வைப்பிலிட்டு இயங்கும் கொழும்பு பழைய மாணவர் சங்கம் இந்த விடயத்தில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை. சென்ற வாரம் மகளிர் கல்லூரி கணனிகள் அன்பளிப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த கொழும்பு பழைய மாணவர் சங்க பொருளாளர், Dr கோணேஸ்வரன் சிதம்பராக்கல்லூரி பக்கமே செல்லவில்லை என்று காத்திருந்து ஏமாந்த பெற்றோர், ஆசிரியர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

சிதம்பராகல்லூரி முன் வளாக பழமையான மரங்களை வெட்டுவது பாடசாலை சூழலையும் இயற்கையை பாதிக்கும் என்று பாடசாலை அபிவிருத்தி சங்கம் (SDC) கடந்த கார்த்திகை மாதம் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும் கொழும்பு சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளர் Dr கோணேஸ்வரன், கொழும்பு சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் திரு யோகசபாபதிபிள்ளை சட்ட விரோதமாக மரம் வெட்டுவதை நியாயப்படுத்த  கொழும்பிலிருந்து கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர்.  கொழும்பு பழைய மாணவர் சங்கம் 15 வருடங்களுக்கு மேலாக வருடாந்த பொதுக்கூட்டம் கூடப்படாமலும் நிர்வாக சபை உறுப்பினர் விபரங்கள் வெளிப்படுத்தப்படாமலும் இரகசியமாக இயங்கி வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *