சிதம்பராகல்லூரி முன் வளாக பழமையான மரங்களை வெட்டுவது பாடசாலை சூழலையும் இயற்கையை பாதிக்கும் என்று பாடசாலை அபிவிருத்தி சங்கம் (SDC) கடந்த கார்த்திகை மாதம் தீர்மானம் எடுத்திருந்தது. எனினும் வல்வெட்டித்துறை சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்க தலைவரும் கொழும்பு சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்க பொருளாளர் Dr கோணேஸ்வரன் மார்கழி மாதம் விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் இல்லாமல் ஓரிரு பெற்றோருடன் சட்ட விரோதமாக ஒரு கூட்டத்தை நடாத்தி இந்த மரங்களை வெட்டி சாய்த்திருந்தனர்.
ஒரு காலமும் கல்லூரிக்கு சமூகமளித்திராத Dr கோணேஸ்வரனை பெற்றோர் முன் இவர் ஒரு வல்வெட்டித்துறை வைத்தியர் என அறிமுகப்படுத்திய பழைய மாணவர் சங்கத்தினர் கூடை பந்து மைதானம் வருவது பிள்ளைகளுக்கு நல்லது இதனால் ஏதேனும் இடையூறு வந்தால் நாம் அதை அகற்றி விடுவோம் என்று உபதேசம் செய்யப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.