கடந்த நவம்பர் மாத இறுதியில் விசேடமாக கூட்டப்பட்ட சிதம்பராக்கல்லூரி பாடசாலை அபிவிருத்தி சங்க (SDC) கூட்டத்தில் கல்லூரி முன்வளாகத்தில் மரங்களை வெட்டி கூடைப்பந்து மைதானம் அமைக்க கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மரங்கள் வெட்டப்படாது என்ற நம்பிக்கையில் இருந்த போது அதிபர் இரகசியமான முறையில் தானே முன்னின்று மரங்களை வெட்டினார் என்பதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். இவ்வாறான அதிபரை நம்பி எமது பிள்ளைகளை அனுப்ப பயமாக உள்ளது. பாடசாலை அபிவிருத்தி சங்க தீர்மானத்தை எதேச்சதிகாரமாக மீறியதற்காகவும் எங்களை நம்ப வைத்து ஏமாற்றியதற்காகவும் இவ்வதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு பெற்றோர்கள் தங்கள் கோரிக்கையை வலய கல்வி பணிப்பாளருக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் நலன்புரி சங்கம் 16-01-2017 அன்று ஓர் அவசர கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி அதிபருக்கும் புதிதாக பதவியேற்றிருக்கும் வலய கல்வி பணிப்பாளருக்கும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தனர். விசாரணை குழு ஒன்றை அமைத்து இப்பிரச்சினைகளை தீர்க்க வலயக்கல்வி பணிப்பாளர் முன்வந்த நிலையில், அரசியல் தலையீடு காரணமாக கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட இடையூறுகளை அடுத்து பத்து ஆசிரியர்கள் 18-01-2017 இல் இடமாற்றம் கோரி கடிதத்தை கல்வி பணிப்பளருக்கு அவசர மடல் வரைந்துள்ளார்கள். முறிக்கப்பட்ட மரங்கள் காரணமாக மாணவர் ஆசிரியர்கள் பல நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.