ஓர் காலத்தில் மிக அதிக சதவீதத்தில் கணித-விஞ்ஞான கற்கை நெறிகளுக்கு பல்கலைக் கழகத்திற்கு தமிழ் மாணவர்கள் தொடர்ச்சியாக தெரிவு செய்து கொண்டிருந்தமையும் அதனை தொடர்ந்து அவர்களின் பல்கலைக்கழக தெரிவை குறைக்கும் நிலையில் தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டமையும் கடந்த கால வரலாறு.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி தமிழ் மாணவர்களில் ஒர் சொற்ப சதவீதத்தினரைத் தவிர மிக பெருமளவிலான மாணவர்கள் பரீட்சையில் கணித-விஞ்ஞான பாடங்களில் சித்திபெறக் கூட தவறிவிடுகின்றனர்.
பாடத்தெரிவில் கணித-விஞ்ஞான கற்கை நெறிகளை தெரிவு செய்வோர் குறைந்து செல்வதும் இதன் விளைவாக விஞ்ஞான-கணிதப் பிரிவு சித்திகளின் அடிப்படையிலான மருத்துவ,பொறியியல் துறை சார் பல வேலைவாய்ப்புக்ளை தமிழ் மாணவர்கள பெற முடியாமல் இருப்பதும் வேதனை தரும் தொடர் கதையாக இருந்து வருகின்றது.
வல்வை மாணவர்கள் கணித-விஞ்ஞான பாடங்களில் உயர்தர வகுப்பைக் கற்க வேண்டுமாயின் நெல்லியடி செல்ல வேண்டியிருந்தது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் தமது தேர்வுக்குரிய பாடங்களைக் கற்க முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையை மாற்றி அமைக்கும்படி பெற்றோரும் மாணவர்களும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். வல்வை 73 அமைப்பினர் சென்ற வருடம் VEDA இல் இவ்வகுப்புகளை ஆரம்பித்து மாதாந்தம் ரூ 50000 தொடர்ச்சியாக நிதியுதவி புரிகின்றனர்.
2017 உயர்தர கணித-விஞ்ஞான வகுப்புகளுக்கான கோரிக்கை VEDA நிர்வாக சபையினரால் 15/11/2016 ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது. 19/11/2016 அன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா வல்வை நலன்புரி சங்கதின் நிர்வாகசபை கூட்டத்தில் இக்கோரிக்கையை பரிசீலித்து 2000 ஆஸ்திரேலியா டொலர்களை கொடை வழங்க நிர்வாகசபை தீர்மானம் எடுத்துள்ளனர்.
இவர்கள் இந்த கல்வி மேம்பாட்டு பணிக்கு வல்வை மக்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.