இந்தியாவுக்குப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள விவகாரம் தீரும் வரையில், இந்தியாவுக்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இலங்கையர்களுக்கு இந்தியத் தூதரகம் ஆலோசனை கூறியுள்ளது.
500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டே, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.