Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Important News » அவுஸ்ரேலியாவில் தேசியமட்ட துடுப்பாட்டப் போட்டியில் ஈழத்தமிழர் அணி கோப்பையை வென்றது

அவுஸ்ரேலியாவில் தேசியமட்ட துடுப்பாட்டப் போட்டியில் ஈழத்தமிழர் அணி கோப்பையை வென்றது

அவுஸ்ரேலியாவில் நடந்த தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டி ஒன்றில், சிறிலங்காவில் இருந்து புகலிடம் தேடிக் சென்ற தமிழ் இளைஞர்களின் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில், நேற்றிரவு நடந்த போட்டியில், ‘ஓசன்ஸ்12′ என்ற பெயரில் ஆடிய ஈழத்தமிழ் இளைஞர்களின் அணி வெற்றியைப் பெற்றுள்ளது.

‘ஓசன்ஸ் 12′ அணி சுதாகர் சேனாதிபிள்ளை தலைமையில் விளையாடியிருந்தது.

Last Man Stands  நடத்திய தேசிய மட்டத்திலான, இந்த போட்டியில் வெற்றியைப் பெற்றதன் மூலம், ஈழத்தமிழ் இளைஞர்களின் அணி அவுஸ்ரேலியாவில் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

oceans-12

பரிசை விட தாம் விளையாட்டின் மீதே கவனம் செலுத்தியதாக இந்த அணியில் இடம்பெற்றிருந்த புருசோத்தமன் சிறீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நாம் வெற்றி பெற்ற போது, மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். நாம் தோல்வியடைந்திருந்தால், எமது பிரச்சினைகளுக்குள் மீண்டும் மூழ்கியிருப்போம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

36 வயதான அவர், 2008ஆம் ஆண்டு சிறிலங்காவில் இருந்து மலேசியா சென்றார். அங்கிருந்து 2013இல் கிறிஸ்மஸ் தீவுக்குச் சென்ற அவர், அடெலெய்ட் குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் இணைப்பு நுழைவிசைவு வழங்கப்பட்டு மேற்கு சிட்னியில் குடியேறியுள்ளார்.

இந்த துடுப்பாட்டத் தொடரில் ஆடிய சிட்னி அணிகளில் ஒன்றான Cults இன் வீரர்களில் ஒருவரான, ரொம் டெளனி, முதலில் ஓசன்ஸ் 12 அணியுடன் விளையாடிய போது சாதாரணமானவர்களாகத் தான் இருந்தனர்.

ஆனால், அவர்கள் பலமானவர்களாகவும், ஒருவருக்கு ஒருவருக்கொருவர் ஆதரவானவர்களாகவும் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *