சீனாவில் இருந்து அளிக்கப்பட்ட கொடைகளைப் பயன்படுத்தி, வடக்கு- கிழக்கில் உள்ள 100 பௌத்த விகாரைகளை சிறிலங்கா அரசாங்கம் புனரமைப்புச் செய்யவுள்ளது.
சீனாவின் குவாண்டூன் பௌத்த சங்கத்தின் தலைவர் மிங் செங், 20.24 மில்லியன் ரூபாவை சிறிலங்காவின் பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காக கொடையாக வழங்கியிருந்தார்.
இந்த நிதியைக் கொண்டு, வடக்கு – கிழக்கில் உள்ள 100 பௌத்த விகாரைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து கிடைத்துள்ள கொடையைப் பயன்படுத்தி, வடக்கு கிழக்கில் உள்ள விகாரைகளில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.