அம்பாறை முல்லைத்தீவு மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று இன்று அதிகாலை செம்மலை நாயாறு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் அம்பாறையில் இருந்து முல்லைதீவு நோக்கி பயணிக்கும் வேளையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்சார தூண்களை உடைத்து கொண்டு தடம்புரண்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து சாரதி படுகாயமடைந்துள்ளதோடு பயணிகள் எவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.
விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .