Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » லண்டனில் 25 வருடங்களாக இயங்கும் சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம்

லண்டனில் 25 வருடங்களாக இயங்கும் சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம்

ஆச்சரியப்பட வேண்டாம் உண்மையை வல்வை மக்கள் முன் வெளிப்படுத்துகின்றோம். பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டு சங்கம் (TSSA) வருடாந்தம் பெரிய அளவில் விளையாட்டு விழாக்களை நடாத்தி வருகிறது. இந்தச்சங்கத்தில் தாயகத்து பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. 25 ஆவது வருடாந்த விளையாட்டு விழா கடந்த ஆவணி மாதம் நடைபெற்றது. இதில் சிதம்பராக்கல்லூரி பழையமாணவர் சங்கம் பங்குபற்றியிருந்தது. இது சிதம்பரகல்லூரிக்கு தெரியுமா? ஏன் london வல்வை மக்களுக்கு தெரியுமா?

லண்டனில் உள்ள சிதம்பரா பழைய மாணவர்களுக்கு தெரியாமல் 25 வருடமாக இயங்கி குறிப்பிட்ட சிலரின் பிள்ளைகள் பந்தடிக்கவும் வல்வை மக்களை தனி ஒருவரே பிரதிநிதிப்படுத்துவதாக மற்றைய ஊர் மக்களுக்கு ஓர் மாயை தோற்றத்தை காட்டி சிதம்பரா பழைய மாணவர்களால் லண்டனில் சிதம்பராபழைய மாணவர் சங்கம் உருவாவதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் திரைமறைவில் தடுத்து சிதம்பரவின் இன்றய வீழ்ச்சிக்கு அடிகோலியுள்ளனர்.

கீழ் குறிப்பிட்ட TSSA இணையதளத்தில் உள்ள full members list இவர்கள் யார் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

http://tssauk.com/full-memebers-details.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *