போரினால் சிதைக்கப்பட்ட கல்வியை மேம்படுத்தும் ஒரு முயட்சியாக பேராசிரியர் ஜெயந்தசிறீ பாலகிருஸ்ணன் அவர்களால் மாணவிகளுக்கு தன்முனைப்பாற்றல் motivational speech விரிவுரை நிகழ்த்தினார். உளவியலை மேம்படுத்துதல், எண்ணங்களை விதைத்தல் என்ற இரு பெரும் பணிகள் வல்வையில் புதிய வெளிச்சம் ஆற்றுப்படுத்தல் பயிற்ச்சிப்பட்டறை ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எண்ணங்களே பிரம்மாக்கள். அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. எல்லாச்செயல்களுக்கும் மூல விதை எண்ணங்களே. வட கிழக்கெங்கும் நீடித்து நிலைத்திருக்கும் மக்களின் உளவியல் மேம்படுத்தலுக்கும் இளம் தலைமுறையினருக்கு நல் எண்ணங்களை விதைத்தலுக்கும் புதிய வெளிச்சம் ஆற்றுப்படுத்தல் பயிற்ச்சிப்பட்டறை நல்லதோர் ஆரம்பம்.
அ நவஜீவனின் இந்த சேவை மேலும் தொடரட்டும்