சிறிலங்கா அரசாங்கம் தனது அனைத்துலக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் நியூயோர்க்கில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போதே, சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா அதிபரிடம் நம்பிக்கை வெளியிட்டதாக, அமெரிக்க இராஜாங்கச் திணைக்களத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் முதலாவது அமெரிக்க சிறிலங்கா பங்காளர் கலந்துரையாடல் குறித்தும், இருநாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதாகவும், இந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.