ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவைச் சந்தித்தார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு, கடந்த 20ஆம் நாள், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருந்துபசாரம் அளித்தார்.

லொட்டே நியூயோர்க் விடுதியில் நடந்த இந்த விருந்துபசாரத்தின் போதே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்க அதிபர் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், ஒபாமா தம்பதிகளுடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துக் கொண்டார்.

obama-maithri-2

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் நிறைவடையவுள்ள நிலையில், அவர் உலகத் தலைவர்களுக்கு அளித்த இறுதி விருந்துபசாரம் இதுவாகும்.