சிறிலங்காவுக்கான புதிய இந்தியத் தூதுவராக, தரன்ஜித்சிங் சந்து, நியமிக்கப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இவர் தமது கடமையை விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் வை.கே.சின்ஹாவின் பதவிக்காலம் முடிவடைகின்ற நிலையிலேயே, சிறிலங்காவுக்கான புதிய தூதுவரை இந்தியா நியமித்துள்ளது.
சிறிலங்காவுக்கான தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ள தரன்ஜித்சிங் சந்து, 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தொடக்கம், 2004 செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கான கவுன்சலராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.