முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேச செயலர் பிரிவில் பத்தொன்பது கிராம அலுவலர் பிரிவில் ஒன்பது கிராம அலுவலர் மட்டும் பணியிலுள்ளதாக புதுக்குடியிருப்புப் பிரதேச செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பத்து கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலர்கள் பணியில் இல்லாததன் காரணமாக பணியிலுள்ள ஒன்பது கிராம அலுவலர்களுமே ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளில் பணியாற்றி வருவதாகவும் இதன் காரணமாக கிராம அலுவலர்களின் பணிச்சுமை கூடுதலாகக் காணப்படுவதாகவும் இதேவேளை புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.