வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் உள்ள வேவிலந்தை தோட்டக்கிணற்றிலேயே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி காணிகளை சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கிணற்றை இறைத்து சுத்தப்படுத்தியுள்ளார்.
இதன் போது அதற்குள் வெடிபொருட்கள் காணப்பட்டதையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர் அறிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அக்கிணறு நேற்று தோண்டப்பட்ட போது அதிசக்கி வாய்ந்த இரண்டு கிளைமோர் குண்டுகள் மற்றும் பை ஒன்றில் கட்டப்பட்டிருந்த வெடி மருந்து என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் வல்லை வெளிப்பகுதியில் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.