Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » தொண்டைமானாறு வெளிக்கள நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா

தொண்டைமானாறு வெளிக்கள நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா

தொண்டைமானாறு ஆற்றங்கரை வீதியில் உள்ள வெளிக்கள நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்றுமாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ற் மாதம் 21 ஆம் திகதியன்று பிற்பகல் 3.00 மணிக்கு வடமாகாண கல்வி அமைச்சர் கௌரவ.த.குருகுலராஜா அவர்களினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த 20 வருடங்களாக இடம் பெயர்ந்து தனியார் வீடுகளிலும், சில பாடசாலைகளின் வகுப்பறை கட்டிடங்களில் தற்காலிகமாக இயங்கி வந்த நிலையில் மாணவர்களின் செய்முறை மற்றும் விஞ்ஞானக்களப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியாதிருந்த போதும் பரீட்சைகளை மட்டுமே நடத்திக்கொண்டு வந்த நிலையில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தை முழுமையாக தொண்டைமானாற்றிலேயே இயங்கச் செய்து மாணவர்களின் விஞ்ஞானக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டுமென்ற நோக்கில் முன்னாள் வல்வெட்டித்துறை நகர பிதாவாக இருந்த நடராஜா அனந்தராஜ் அவர்கள் மேற்கொண்ட முயற்சியினால் செல்வச் சந்நிதி ஆலயத்தின் பிரதம குருக்களில் ஒருவரான சிவஸ்ரீ.தங்கராசா ஐயர் அகிலேந்திர ஐயர் அவர்களினால் மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான நிலத்தை தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் கல்வியபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக தனது தாய், தந்தையர்களின் ஞாபகார்த்தமாக அன்பளிப்பாக வழங்கி யிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 2012 ஆம் ஆண்டு டில்மா நிறுவனத்தினரால் சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கட்டடம் கட்டிக் கொடுக்கப்பட்டதைத் தொடர்து தற்பொழுது வெளிக்கள நிலையத்தின் நிதியில் இருந்து சுமார் 3கோடி ரூபா பெறுமதியான 3 மாடிக் கட்டடம் சகல வசதிகளுடனும் கட்டப்பட்டு எதிர்வரும் செப்ரெம்பர்மாதம் முதலாம் திகதியில் இருந்து வெளிக்கள நிலையத்தின் சகல செயற்பாடுகளும் அதன் சொந்தக்கட்டிடத்திலேயே நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Lagoon

தொண்டைமானாறு வீரகத்திப் பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் தலைவர் திருமதி. எஸ்.குகநாதனின் தலைமையில் நடைபெறும் இப்புதிய கட்டடத் திறப்பு விழாவின் வரவேற்புரையை நிலையத்தின் உப தலைவர் நடராஜா அனந்தராஜ் நிகழ்த்த ஆசிரையை சிவஸ்ரீ.த.அகிலேந்திர ஐயர் வழங்கள்ளார். வாழ்த்துரைகள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சி.நந்தகுமார், யாழ் வலயக் கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா, வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், மற்றும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் அவர்களாலும் வழங்கப்படும். நன்றி உரை வெளிக்கள நிலையத்தின் செயலாளர் சி.சுகுமாரன் அவர்களால் வழங்கப்படும்.

thonda

 

thonda1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *