தெற்காசியாவின் மிகப்பெரிய துறைமுகமாக கொழும்புத் துறைமுகம் விரிவாக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகம் ஜா-எல வரை விரிவாக்கப்படும் என்றும், இதன் மூலம் தெற்காசியாவின் மிகப் பெரிய துறைமுகம் என்ற நிலையை கொழும்புத் துறைமுகம் பெற்றுக் கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்புத் துறைமுகத்தை விரிவாக்குவதற்கு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் உதவியை சிறிலங்கா கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.