சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் அவர், வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மறுசீரமைப்புச் செய்யப்படும். கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்குப் பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
புதிய கட்சியை உருவாக்கி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்கும் சதித்திட்டங்களுக்கு யாரும் துணைபோகக் கூடாது என்றும், எச்சரித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.