தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஹாலி-எலவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘சிறிலங்காவில் வாழும் தமிழர்கள் தனி ஈழம் ஒன்றைக் கோரவில்லை.
தமிழர்கள் தனி ஈழத்தைக் கோருகிறார்கள் என்று வெளியிடப்படும் கருத்துக்களுக்கு மக்கள் ஏமாந்து விடக் கூடாது’ என்றும் அவர் கூறியுள்ளார்.