இன்னும் இரண்டு மாதங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உயர்மட்டத்தில் இடம்பெற்ற சில குற்றச்செயல்கள் தொடர்பாக நடத்தப்படுமு் விசாரணைகளின் தொடர்ச்சியாகவே கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்பட்டால், சிறைக்குச் செல்லும்டு, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது நபராக அவர் இருப்பார்.
ஏற்கனவே பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கோத்தாபய ராஜபக்ச அரசியலில் நுழைவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோத்தாபய ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதாகவும் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான பரப்புரைகளை அவர் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகவும், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.