Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Education » ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆசிரியர் மாணவர் முகாமைத்துவம் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது

ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆசிரியர் மாணவர் முகாமைத்துவம் கணனிமயப்படுத்தப்பட்டுள்ளது

வட மாகாண கல்வியின் பின்னடைவிற்கு இன்றும் போரின் வடு ஓர் காரணம். இருப்பினும், யுத்தத்திற்குப் பின்னர் மீள்கட்டமைப்புச் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற போதும், வெளிப்படையாக கண்ணுக்கு புலப்படாத வீழ்ச்சியை நோக்கி வட மாகாணத்தின் கல்வி நிலை சென்று கொண்டிருக்கின்றது என்பது இங்கு கவனத்திற் கொள்ள வேண்டிய ஆபத்தான நிலைமையாகும். மாகாண ரீதியான தரப்படுத்தலில் மாகாணத்தில் 09 வது இடத்தையும், வடமாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டத்தில் 25வது இடமான கடைசி இடத்தை பெற்றுள்ளதுடன் இலங்கையில் கல்வியில் முதலிடத்தை வகித்த யாழ் மாவட்டம் தற்போது கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று என்ற நிலைமையை அடைந்ததற்கு நாம் வெட்கப்படத்தான் வேண்டும்.

Skanda1இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தை விடவும் தமிழ் சமூகத்திற்கே அதிகம் உள்ளது.  புலம்பெயர் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் உதவியை அண்மையில் லண்டன் கல்வி மகாநாட்டுக்கு வருகை தந்திருந்த வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் கேட்டிருந்தார். தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதில் காணப்படும் தடங்கல்கள், குறிப்பாக தரவுகள் பரிமாறும் வேகப் பற்றாக்குறை  கல்விக்கான இணையத்தளங்கள் இல்லாமை, பாடசாலைகளில் கணனிகள் பயன்பாடின்மை போன்றன நிவர்த்திக்கப்படும் பட்சத்தில் கல்வியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Skanda3பிரித்தானியாவில் பெரும்பாலான பாடசாலைகள் SIMS (School Information Management System) மென்பொருளை அமுலாக்கி வினைத் திறனுள்ள நிர்வாக முறைமை கொண்டு இயங்குகின்றன. Beetatec நிறுவனம் யாழ்பாண மென்பொருள் பொறியியளாளர்களுடன் இணைந்து  ஆசிரியர் மாணவர் முகாமைத்துவ முறைமை SMS (School Management System) மென்பொருளை இலங்கை பாடசாலைகளுக்காக  உருவாக்கி  16 பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

லண்டனில் வசிக்கும் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் குழந்தைவடிவேல் துளசிச்செல்வன் அனுசரணையில் சுமார் 1000 மாணவர்கள் கல்வி பயிலும் 1AB தர கந்தரோடை ஸ்கந்தவரோதயா கல்லூரியில் யாழ் மென்பொருள் பொறியியளாளர்கள் முகாமைத்துவ முறைமையை  கணனி மயப்படுத்தியுள்ளனர். மாணவர் ஆசிரியர் வரவு, கால அட்டவனை, மாணவர் தேர்ச்சி அறிக்கை, மாணவர் புள்ளி ஆய்வறிக்கை (வகுப்பு ரீதியான, பாட ரீதியான, வகுப்பு பிரிவு ரீதியான), ஆசிரியர் திறனாய்வு அறிக்கை, கணிப்பீட்டு பதிவேடு, விளையாட்டு பதிவுகள் (சான்றிதழ்கள், புள்ளிக் கணிப்புக்கள், வயது பிரிவில் சிறந்த வீரர் தெரிவு) நூலகம், கணக்குகள்  அடங்கிய அனைத்து செயட்பாடுகளும் இலகுவாக கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.

Skanda2ஆசிரியர் மாணவர் முகாமைத்துவ முறைமை செயல்படுத்தப்பட்டுள்ள கல்லூரிகள் விபரம் J/Nelliady CentralCollege, J/Hartley College, J/Methodist College, J/Chavachery Hindu College, J/Kilinochchi Central College, J/Puttalai Maha Vidiyalayam, J/Vigneswara College, J/Thumpalai Sivapiragasa Maha Vidyalayam, J/Jaffna Hindu Ladies’ College, J/Chithambara College, J/Uduppiddy girls’ college, J/Vaddakachchi Central College, Mn/Murunkan Maha Vidyalayam, J/Skandavarodaya College, J/Vembadi Girls’ High School, J/Victoria College,Chulipuram.

கல்வி அபிவிருத்தி என்பது மனித வளர்ச்சிக்கான தூண்டுகோலாகும். மிகவும் பின்தங்கியுள்ள கல்வி நிலையை உயர்த்துவதன் மூலம் மக்கள் வலுவூட்டப்பட்டு சுயமாக வாழும் ஓர் சமூகமாக மாற்றமடைவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *