பிரான்சின் தென்பகுதியில் உள்ள நைஸ் நகரில், நேற்றிரவு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் ஒன்றில் 75 பேர் கொல்லப்பட்டதாகவும், 100 பேருக்கு மேல் காயமடைந்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சின் தேசிய நாள் கொண்டாட்டத்துக்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்த பகுதி ஒன்றினுள், பாரஊர்தி ஒன்றை வேகமாகச் செலுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் பாரஊர்தியில் சிக்கி குறைந்தது 75 பேர் பலியானதாகவும், 100இக்கும் அதிகமானோர் காயமடைந்தாகவும், பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, பாரஊர்தியின் ஓட்டுனர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது ஒரு தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொடூரமான இந்த தீவிரவாத தாக்குதலைக் கண்டிப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.