நாட்டைக் கட்டியெழுப்பும், அமைதியைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில், சிறிலங்கா படைகளை காத்திரமான வகையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்காவின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்காக, சிவில் – இராணுவ ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில்,சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய முப்படைகளினது அறிவும், வளங்களும், நாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் அமைதியைப் பேணும் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
புதிதாக உருவாக்கப்படவுள்ள தேச அபிவிருத்தி அமைப்பில் சிறிலங்கா படையினர் முக்கிய பங்கு வகிக்கவுள்ளனர் என்று, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.