Evertree Fruit Products (pvt) Ltd நிறுவனத்தின் விநியோக நடவடிக்கைகள் வல்வையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி பழச்சாறு நிறுவனமானது கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. பல சோதனைகளைத் தாண்டி தனது முதலாவது உற்பத்தியான மாம்பழ பானத்தை ஜூலை 6 ஆம் திகதி புதன்கிழமை வல்வையில் சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்நிறுவனம் தனது உற்பத்திகளை Evertree என்னும் பெயரில் சந்தைப்படுத்த ஆரம்பித்துள்ளது.
மேற்படி பழச்சாறு தயாரிப்பதற்கு உள்ளூர் பழங்களே பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதனால் உள்ளூர் பழ உற்பத்தியாளர்கள் மிகவும் பயன் அடைவார்கள். மேலும் தொழிற்சாலையில் வேலை செய்வதற்கும் சந்தைப்படுத்தளுக்கும், இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படவுள்ளார்கள். வல்வையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத் தொழிற்சாலை எல்லோரது வரவேற்பையும் பெற்றுள்ளது.