இந்த வருடம் (3.7.2016) கடந்த வருடத்தை விட அதிகமான அணிகள்பங்குபற்றுவதனால், அதிக மைதானம், பாரிய கார் பார்க் வசதிகள் கொண்ட புதிய மைதானத்தில் வல்வை கோடை விழா நடைபெறவுள்ளது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ளவும்
பிரித்தானியாவில் வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் நடத்தப்படவிருக்கும் 11வது கோடை விழா மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் 11வது கோடை விழா நடைபெற இருக்கின்றது. ஆண்டு தோறும் மிகப்பெரிய அளவில் மாற்றமடைந்துவரும் இந்த கோடை விழாவில் இந்த ஆண்டு ஐரோப்பிய ரீதியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்த ஆண்டு 124 கழகங்கள் பங்கு பெறும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெறவுள்ளது.
மட்டுமின்றி சிறுவர்களுக்கான விளையாட்டுகள், கபடி, தலையணை சண்டை, கயிறு இழுத்தல், கரப்பந்தாட்டம், பெண்களுக்கான பாடும் பந்து என பல போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
தற்போதைய நிலையில், தமிழர் விளையாட்டு விழாக்களில் அதிக அளவிலான கழகங்களும் மிக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடும் ஒரு பெரும் விழாவாக இந்த கோடை விழா தனித்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு 6,500-7,000 மக்கள் வரை ஒன்று கூடிய விழாவானது இந்த ஆண்டு 7,000-8,000 மக்கள் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றிபெறும் கழகங்களுக்கு 5,850 பவுண்டுகள் பரிசாக வழங்கப்படும்.
வல்வையின் பெயறில் கன்டீன் நடாத்தி மாவீரர் குடும்பங்களிடம் 100 பவுண்ட்ஸ் மற்றும் கழகங்களிடம் வசூல் செய்து கிடைத்த பணத்தை இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?