Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » சகஜம்” கூட்டூமம் (pantomime) நாடக ஆற்றுகை

சகஜம்” கூட்டூமம் (pantomime) நாடக ஆற்றுகை

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் வாரம் தோறும் நடைபெறுகின்ற Welcome to Sunday Show நிகழ்வில் நேற்றைய தினம் ”சகஜம்” எனும் கூட்டூம நாடக ஆற்றுகை நடைபெற்றது . இன் நாடக நடிகர்களாக. இ.வினோதன், த.கில்மன், இ.மகிந்தன், ம.சுலக்ஷன்,த. கயன், லி.அனன்ராஜ். ஆகியோர் பங்கேற்றனர். ஒளி விதானிப்பு, நெறியாள்கையினை தி தர்மலிங்கம் மேற்கொண்டிருந்தார். ஒளி இயக்க உதவியினை ம.சுலக்ஷன், இ.மகிந்தன் ஆகியோர் மேற்கொண்டனர்..ஒளிப்படங்கள்.ஆ.ஸ்ரீகந்த்.

இந்த நாடக ஆற்றுகை நடிகர்களுக்கும் பார்ப்போருக்கும் புதிய அனுபவ வெளியினை ஏற்படுத்தியதாக இருந்தது . வார்த்தைகள் இல்லாது உடல் மொழி மூலமாக அனைத்து நடிகர்களும் தொடர்பாடிக்கொண்டமை சிறப்பு . இத்தகைய ஆற்றுகை  சாதாரன மாக நாம் பார்க்கின்ற வசன நாடகங்களை விடவும் சற்று கடுமையான பயிற்சியின் முக்கியத்தைஎடுத்து காட்டின .  மேலும் யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தின் இத்தகைய வித்தியாசமான ஆற்றுகைகள் இலங்கையில் வேறு எந்த ஒரு அரங்க கலை கழகத்திலும் நடைபெறுவதில்லை என்பது சிறப்பான விடயமாகும். 2004 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட யாழ்ப்பாணம் அரங்க கலை கழகம் ஆனது  அன்றிலிருந்து இன்றுவரை  தொடர்ச்சியான தன் கலை சேவைகளை ஆற்றி வருகிறது . இலங்கையின் பெரும்பாலான இடங்களில்  சென்று அங்கு நடக்கும் பிரச்னைகளை தெரு வெளி நாடகங்கள் ஊடாக  மக்களை விழிக்க செய்து  பெரும் சமுதாய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது . மேலும் மேடை நாடகங்கள் , குறும்படங்கள் , பயிற்சி பட்டறைகள் , என தொடர்ச்சியான பணியை  ஆற்றி வரும் அரங்க கலை 2016 இன்  ஆரம்பத்தில் இருந்து  வாரந்தோரும் ” WELCOME TO SUNDAY SHOW ”  எனும்  புதிய நிகழ்வை நடத்திவருகிறது . இது இலங்கையின்  அரங்க கலை  வரலாற்றில்   புதியதோர் பரிணாமமாக  பார்க்கப்படுகின்றன .

வல்வை சுமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *