Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா விண்ணப்பம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா விண்ணப்பம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா அரசாங்கம் நேற்று மாலை விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

மனித உரிமைகள் நிலை பற்றிய கரிசனைகளால், சிறிலங்காவுக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை, ஐரோப்பிய ஒன்றியம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தியது.

இந்தச் சலுகையை மீளப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தச் சலுகையைப் பெறுவதற்கு நேற்று முறைப்படி விண்ணப்பித்தது.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா,

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில், பிரசெல்சில் உள்ள சிறிலங்கா தூதுவர் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுப்பதற்கு ஆறு மாதங்கள் செல்லும். ஏனைய நடைமுறைகளை நிறைவு செய்து, மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு மேலும் 8 மாதங்கள் தேவைப்படும் என்று நாம் நம்புகிறோம்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவுள்ள பிரித்தானியாவுடனும், வர்த்தக உடன்பாடு செய்து கொள்ளப்படும். ஆனால், பிரித்தானியாவுடன் வர்த்தக உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கு ஏனைய நாடுகளும் கடுமையான போட்டியில் இருக்கும்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீளக் கிடைத்தால் அது சுற்றுலாத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவராக அமரி விஜேவர்த்தன விரைவில் நியமிக்கப்படுவார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *