Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » கட்டுநாயக்கவில் இருந்த வெடிபொருட்கள் ஒதுக்குப்புறமான இடங்களுக்கு மாற்றம்

கட்டுநாயக்கவில் இருந்த வெடிபொருட்கள் ஒதுக்குப்புறமான இடங்களுக்கு மாற்றம்

கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மேலதிக வெடிபொருட்களை, ஒதுக்குப் புறமான இரண்டு இடங்களுக்கு மாற்றியிருப்பதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

கொஸ்கம சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் கடந்த 5ஆம் நாள் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தினால், பெருமளவில் அழிவுகள் ஏற்பட்டன.

இதையடுத்து, முப்படைகளினதும் ஆயுதக் களஞ்சியங்களை சன அடர்த்தி குறைந்த பகுதிக்கு மாற்றவும், அவற்றின் பாதுகாப்பை ஆய்வு செய்யவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சந்திம சில்வா கருத்து வெளியிடுகையில்,

‘வெடிபொருள் களஞ்சிய வசதிகள் தொடர்பாக சிறிலங்கா விமானப்படை ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், வெடிபொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சனஅடர்த்தியுள்ள பகுதிகளில் உள்ள வெடிபொருள் களஞ்சியங்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் மேலதிக வெடிபொருட்களை நாம் கையிருப்பில் வைத்திருந்தோம்.

தற்போது அவற்றை கட்டுநாயக்கவில் இருந்து அகற்றி, ஒதுக்குப் பறமான இரண்டு இடங்களுக்கு மாற்றியுள்ளோம்.

நாம் ஏற்கனவே பல உள்ளக ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையில் தான், வெடிபொருள் களஞ்சியங்களை இடம்மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *