விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த தனது ஆட்சிக்காலம் தொடர்பான பொதுமக்களின் நினைவுகளைத் துடைத்தெறிய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவவில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
‘நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் போரை முடிவுக்குக் கொண்டு வந்தேன். எனது ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களின் நிலங்களை மீள ஒப்படைக்கத் தொடங்கியிருந்தோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.