ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால், சிறிலங்காவுக்கு நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கான பேச்சுக்கள் நடந்து வரும் சூழலில், இந்த வெளியேற்றம் இடம்பெற்றிருப்பது சிறிலங்காவுக்கு மோசமான தருணமாகும்.

பிரித்தானியாவின் வெளியேற்றத்தினால், பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், பாதிப்பை ஏற்படுத்தும். பெரிய சந்தைகளைப் பாதிப்பதால் சிறிய பொருளாதாரங்களுக்கு இழப்பு ஏற்படும்.

நிலைமைகள் உறுதியடைவதற்கு காலம் தேவைப்படும். இதனால் சிறிய பொருளாதாரங்கள் மோசமான பாதிப்பைச் சந்திக்கக் கூடும்.

பிரித்தானியாவில் நடந்த கருத்து வாக்கெடுப்பு விடயத்தில் சிறிசேன- விக்கிரமசிங்க அரசாங்கம், பிரித்தானியப் பிரதமர் கமரூனுக்கு ஆதரவளித்தது பெரும் தவறு. சிறிலங்கா அரசாங்கம் நடுநிலை வகிக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பிரித்தானியாவின் பிரிந்து செல்லும் முடிவு சிறிலங்காவுக்குப் பாதகமானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்காரவும் தெரிவித்துள்ளார்.