Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » உலக கராட்டி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வல்வையை சேர்ந்த அகிலன் கருணாகரன்

உலக கராட்டி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வல்வையை சேர்ந்த அகிலன் கருணாகரன்

வல்வெட்டித்துறையை சேர்ந்த இங்கிலாந்தில் வசிக்கும் திரு. திருமதி கருணாகரன் கவிதா தம்பதிகளின் புதல்வன் (வல்வை புளுசின் முத்த விளையாட்டு வீரர் திரு.அ.கதிர்காமலிங்கம் அவர்களின் பேரன்) செல்வன்.அகிலன் கருணாகரன் 18.06.2016 அன்று ஐலன்ட் (இல்) நடைபெற்ற உலக கராட்டி போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டு தமிழ் இனத்திற்கும் வல்வைக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.
2014ல் போலந்து நாட்டில் நடந்த சாம்பியன்ஷிப்பில் இவர் வெள்ளிப் பதக்கத்தை,
2015ல் பெல்ஜியத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் இவர் kumite விளையாட்டில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுக் கொண்ட அகிலன் இந்த வருடம் நடைபெற்ற உலக கராட்டி போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டு தமிழ் இனத்திற்கும் வல்வைக்கும் பெருமை சேர்த்து உள்ளார்.

ஆகிலனின் முயற்சியும், பயிற்சியும், ஆசான் கணேசலிங்கம் அவர்களின் நெறிப்படுத்துதலுமே இவ் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் ஆகும்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *