பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில், முப்படைகளிலும் இருந்து தப்பியோடிய சுமார் 4500 பேர் சட்டபூர்வமாக படைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 25 ஆயிரம் பேரும், கடற்படையில் இருந்து 7,137 பேரும், விமானப்படையில் இருந்து 510 பேரும், தப்பியோடியுள்ளனர்.
முறையான அனுமதியின்றி 90 நாட்களுக்கு மேல் விடுமறையில் இருக்கும் படையினர் அனைவரும் தப்பியோடியவர்களாக கருதப்பட்டு, இவர்களை மீளப் படையில் சேர்த்துக் கொள்வதற்கு அல்லது முறையாக படையில் இருந்து விலகிக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் நாள் தொடக்கம், அடுத்தமாதம் 13ஆம் நாள் வரை இந்தப் பொதுமன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட பின்னர்,4,269 இராணுவத்தினரும், 211கடற்படையினரும், 165 விமானப்படையினரும், தாமாக முன்வந்து படையில் இருந்து முறையாக விலகியுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.