இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இரண்டு தரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான உடன்பாடு ஒன்று விரைவில் எட்டப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
99 எண்ணெய்க் குதங்களைக் கொண்ட திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி பிரித்தானியர்களால் கட்டப்பட்ட போதிலும், அது முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.