துறைமுகங்கள் மற்றும் விமானத்துறைகளில் இந்தியாவின் முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதில் சிறிலங்கா ஆர்வம் காட்டுவதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், ”சிறிலங்காவில் சீனா காலடி வைப்பது குறித்து இந்தியா அச்சம் கொண்டிருந்தது.
சிறிலங்காவில் பீஜிங்கின் தலையீடு குறித்த புதுடெல்லியின் கரிசனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
சீன முதலீட்டாளர்களுக்கு காணியை விற்பதற்கு தற்போதைய அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை.
ராஜபக்ச அரசாங்கம் புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையில் சவால்களை உருவாக்கியது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் அதனைத் தீர்த்து வைத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.