சிறிலங்காவுக்கு கீழாக ஏற்பட்டு வரும் நிலநடுக்க வழி ஒன்றினால், சிறிலங்காவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்து உருவாகி வருவதாக பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
சிறிலங்காவுக்கு கீழாக 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்க வழி ஒன்று உருவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விளைவாக சிறிலங்காவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மலையகப் பகுதிகளில் பாறைகளின் மீது படிந்துள்ள மண், நிலையிழக்கும் என்றும், இதனால் பெரியளவில் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.