வடக்கில் மேலதிகமாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை முற்றாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமது கட்சி இணங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேவையின்றித் தமது சொத்துக்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக வடக்கிலுள்ள மக்கள் கவலை கொண்டுள்ளனர் என்றும், ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கில் சிறிலங்கா இராணுவத்தினர் விடுதி நடத்துவது மற்றும் ஏனைய வர்த்தகங்களில் ஈடுபடுவது குறித்தும் அங்குள்ள மக்கள் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்குத் தேவையான சொத்துக்களை சிறிலங்கா இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும், தேசிய பாதுகாப்புக்கு அவசியமான முகாம்களை மட்டும் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.