சிறிலங்காவில் தீவிரவாதம் மீண்டும் தலையெடுப்பதை தடுப்பதற்கும், சமூக நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், சட்டத்தின் ஆட்சி மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், மூன்று புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே இந்த மூன்று சட்டங்களும் கொண்டு வரப்படவுள்ளன. தேசிய பாதுகாப்புச் சட்டம், அமைப்புரீதியான குற்றங்களைத் தடுக்கும் சட்டம், புலனாய்வுச் சட்டம் ஆகியனவே புதிதாக கொண்டு வரப்படவுள்ளன.
இந்த மூன்று சட்டங்களும் இன்னமும் வரையப்படும் நிலையில் தான் இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.