சிறிலங்கா கடற்படையின் தரையில் போரிடும் படைப்பிரிவுக்கான ஈரூடக நடவடிக்கை பயிற்சிநெறியின், இரண்டாவது தரையிறக்க பயிற்சி, மட்டக்களப்பு வாகரையில் நிறைவடைந்துள்ளது.
முள்ளிக்குளத்தில் உள்ள சிறிலங்கா கடற்படைத்தளமான எஸ்எல்என்எஸ் பரணவில், கடந்த ஏப்ரல் 27ஆம் நாள் ஆரம்பமான இந்த ஏழு வாரகாலப் பயிற்சி, கடந்த 9ஆம் நாள், வாகரையில் நிறைவுபெற்றது.
11 அதிகாரிகளும், 108 கடற்படையினரும், இந்த பயிற்சிகளில் பங்கேற்றிருந்தனர்.
சிறிலங்கா கடற்படையின் தரை நடவடிக்கைத் தளபதி கொமடோர் உதேனி சேரசிங்கவின் அழைப்பின் பேரில், கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, இந்தப் பயிற்சி நிறைவு நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
இந்த இறுதிக்கட்டத் தரையிறக்கப் பயிற்சியின் போது சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்திகள், சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மற்றும் படகுகளும் பங்கேற்றிருந்தன.