கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, சிறிலங்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்தா அல்லது திட்டமிட்ட செயலா என்று, விசாரணைகள் முடியும் வரை – எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, வெடிவிபத்து ஏற்பட்ட சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கு நீண்ட காலமாக உரிய வகையில் பராமரிக்கப்படவோ, கண்காணிப்படவோ இல்லை என்றும் மற்றொரு இராணுவ உயரதிகாரி தெரிவித்துள்ளார்.