நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹற்ரெம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுநாள் சிறிலங்கா வரும் அவர் ஜூன் 2ஆம் நாள் வரை இங்கு தங்கியிருப்பார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம, ரவூப் ஹக்கீம், மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலகத்தின் பணிப்பாளர் மனோ தித்தவெல உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
வரும் ஜூன் 1ஆம் நாள் யாழ்ப்பாணம் செல்லவுள்ள, நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்கச் செயலர், ரோர் ஹற்ரெம், வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
ரோர் ஹற்ரெம், 2007ஆம் ஆண்டு தொடக்கம், 2010ஆஆம் ஆண்டு வரை சிறிலங்காவில், நோர்வே தூதுவராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.