யாழ்ப்பாணம் கந்தரோடைப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று கைக்குண்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரவு 8.30 மணியளவில் கந்தரோடை உடுவில் வீதி ஞான வைரவர் கோவிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது,
முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகியிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் முயற்சியில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் மூகங்களை முழுதாக மூடிய நிலையில் ஒன்பது பேர் வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர் தப்பியோட முயன்றுள்ளார். இதன் போதே அவர் மீது கைக்குண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
எனினும் இத் தாக்குதலில் அதிஷ்டவசமாக கைக்குண்டு வெடிக்காத நிலையில் குறித்த நபர் எதுவித பாதிப்புமின்றி தப்பியுள்ளார்.
இதேவேளை இந்தசம்பவத்தில் வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்காத நிலையில் அதனை மீட்பதற்கு குண்டு செயலிழக்க செய்யும் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை.