தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தக்கூடாது என்று சிறிலங்கா அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தெரிவித்தார்.
சென்னையில் இன்று பாஜக ஆட்சியின் இரண்டாண்டு சாதனை விளக்கக் கூட்டம் இடம்பெற்றது.
அதன் போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் , தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளன.” என்று குறிப்பிட்டார்.