சிறிலங்காவுக்கு 38 பில்லியன் யென் அதிகாரபூர்வ அபிவிருத்தி உதவிக் கடனை வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேவுக்கும், ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபேக்கும், இடையில் நடந்த இருதரப்புப் பேச்சுக்களின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நகோயா நகரில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, சிறிலங்காவுக்கான அபிவிருத்தி உதவிகளை வழங்கவும், நல்லிணக்க முயற்சிகளுக்கான உதவிகளை வழங்கவும் ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
அத்துடன், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.