Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » குழியில் தேடிச்சென்று விழுந்த மகிந்த-சத்ரியன்

குழியில் தேடிச்சென்று விழுந்த மகிந்த-சத்ரியன்

ஒரு ஜனாதிபதிக்குரிய தோரணையுடன் உகண்டாவுக்கான பயணத்தை மேற்கொண்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.உகண்டாவில் அவருக்குக் கிடைத்த வசதிகள், மரியாதைகள், கடந்த ஒன்றரைஆண்டுகளில் அவர் இழந்து போயிருந்தவற்றை மீளப் பெற்றுக் கொண்டது போன்றஉணர்வை ஏற்படுத்தியிருக்கலாம்.உகண்டாவின் ஜனாதிபதி யொவேரி முசெவேனி ஐந்தாவது தடவையாகவும்ஜனாதிபதியாகப் பதவியேற்கும் நிகழ்வில், கலந்து கொள்ளவே முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச கம்பாலா சென்றிருந்தார்.மகிந்த ராஜபக்சவுக்கும், முசெவேனிக்கும் பல்வேறு விடயங்களில் ஒற்றுமைகள் உள்ளன.இருவருமே, தொடர்ந்து மூன்று தடவைகளுக்கு மேல் அதிகாரத்தில் இருப்பதற்காக,

சட்டத்தை தமது வசதிக்கேற்ப வளைத்தவர்கள்.

ஒரேயொரு வித்தியாசம், முசெவேனி மோசடிகளின் மூலம், தொடர்ந்தும், ஐந்தாவது

 

தடவையும் தனது ஆட்சிப் பொறுப்பைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் மகிந்த ராஜபக்சவினால், 18ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்து,சட்டத்தைத் தனக்குச் சாதகமாக வளைத்த போதிலும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிட்ட அவர் மக்களால் தோற்கடிக்கப்பட்டார். மகிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை இழந்த போதும், தாம் பதவியில் இருந்த போது, உகண்டா ஜனாதிபதி யொவேரி முசெவேனி போன்றவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட

 

உறவுகளை இழக்கவில்லை என்பதையே, அவரது கம்பாலா பயணம் எடுத்துக்

காட்டியிருக்கிறது. துவும், தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்காமல், ஆட்சியில் இல்லாத அல்லது குறைந்தபட்சம் ஒரு கட்சியின்  தலைவர் பதவியில் கூட இல்லாத மகிந்த ராஜபக்சவுக்கு உகண்டா வெளிவிவகார  அமைச்சு அழைப்பை விடுத்திருந்தது.

ஒருவகையில் இது இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தை வமதிக்கின்ற ஒரு விடயம்.இன்னொரு வகையில், உலகளவில், மேற்குலக நாடுகளின் அதிருப்தியைச் சம்பாதித்துள்ள நாடுகள் மத்தியில் மகிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்ற செல்வாக்கையும் வெளிப்படுத்தியிருக்கிறது.ஆட்சியில் இருந்த காலத்தில், வெனிசூவேலாவில் ஆட்சியில் இருந்த சாவேஸ், லிபிய

 

அதிபர் கடாபி ஆகியோருடன் நெருங்கிய நட்புறவை வைத்திருந்து மேற்குலகை  வெறுக்கும் தலைவர்களில் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் மகிந்த ராஜபக்ச.இப்போது, முன்னைய இருவரும், உயிருடன் இல்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சியில்  இல்லை.

உகண்டா ஜனாதிபதியாக முசெவேனி பதவியேற்கும் நிகழ்வுக்கு, பெரும்பாலும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுக்குத் தான் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில், இலங்கை ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ அத்தகைய அழைப்பை  விடுக்காதிருந்தது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல. எனினும், இலங்கை அரசுக்கு  அதிகாரபூர்வ அழைப்பு சம்பிரதாயத்துக்கேனும் அனுப்பப்படவில்லை. ஆனால், ஆட்சியை இழந்து போயிருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கு, இலங்கையின் சார்பில் அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. உகண்டாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால நெருங்கிய நட்புறவு ஒன்றும் இருந்ததில்லை. மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தான் அது ஏற்படுத்தப்பட்டது.

 

அதுவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், நெருக்கடிகள் அதிகரித்த போது, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் தான் அந்த உறவு ஏற்படுத்தப்பட்டது.உகண்டாவுக்கு மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணத்தின் போது, அங்கு தொழிற்பயிற்சிக் கூடம் ஒன்றை ஆரம்பிக்க உதவி அளித்திருந்தார். எதற்காக இந்த உதவி என்பது

இன்னமும் விளங்காத இரகசியமாகவே பார்க்கப்படுகிறது. முசெவேனிக்கும், மகிந்தவுக்கும் இடையிலான நெருக்கமான உறவு, மகிந்த ஆட்சியில்

இல்லாத போதும் தொடர்கிறது என்றால், அது சந்தேகம் கொள்ள வேண்டிய ஒன்று தான். முசெவேனி சர்வதேச அரங்கில் ஓரம் கட்டப்பட்டு வரும் ஒருவர், அவர் தனக்குப் பலத்தைச் சேர்த்துக் கொள்வதற்காக மகிந்த ராஜபக்சவைப் பயன்படுத்திக் கொள்கிறார்.  அதனால் தான், அவரை, இலங்கையின் பிரதிநிதியாக அழைத்திருக்கிறார்.கம்பாலாவில், முசெவேனியின் பதவியேற்பு விழாவில், ஆபிரிக்க நாடுகளின்தலைவர்களுக்கு நடுவில் தான், மகிந்த ராஜபக்சவுக்கு ஆசனம் போடப்பட்டிருந்தது. விழா

நடக்கும், அரங்கிற்கு மகிந்த ராஜபக்ச அழைத்து வரப்பட்ட காரில், லங்கையின்

 

தேசியக்கொடி பறந்து கொண்டிருந்தது.காரில் வந்திறங்கியதும், உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படுவது போன்று செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

பதவியேற்பு மைதானத்தில், நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டுத் தலைவர்கள் எந்த நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களோ அந்த நாட்டின் தேசியக்கொடிபறக்கவிடப்பட்டிருந்தது. அதில், இலங்கையின் தேசியக் கொடியும் அடங்கியிருந்தது.இலங்கை அரசின் சார்பில் யாரும் அதிகாரபூர்வமாக அழைக்கப்படாத நிலையிலும், மகிந்தவுக்காகவே அத்தகைய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.இந்தநிலையில் ஆட்சியில் இல்லாத- முன்னாள் ஜனாதிபதி ஒருவர், வெளிநாட்டில் தம்மை இலங்கையின் பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. அதுவும்

மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு இத்தகைய சிறப்புரிமைஉள்ளதா என்பது சந்தேகம் உகண்டாவின் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் தான் மகிந்த ராஜபக்ச கம்பாலாசென்றதாக, அவரது அணியைச் சேர்ந்த உதய கம்மன்பில தெரிவித்திருக்கிறார்.அதுபோல, முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்துக்கு,

அரசாங்கமே வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்றும், அதன்படியே மகிந்தவின்  விமானப் பயணச்சீட்டு அரசாங்கத்திடம் கோரப்பட்டதாகவும் அவரது தனிப்பட்ட செயலர் உதித்த லொக்குபண்டார தெரிவித்திருந்தார்.

 

ஆக, மகிந்த ராஜபக்சவின் உகண்டா பயணம், ஒரு அதிகாரபூர்வ பயணமாகவே அவரது தரப்பினரால் கூறப்படுகிறது. ஒரு நாட்டின் அதிகாரபூர்வ பிரதிநிதியாக, பங்கேற்பதென்பதற்கு, அரச நெறிமுறைகள் பல  உள்ளன. அதனை மகிந்த ராஜபக்சவோ, உகண்டா அரசாங்கமோ பின்பற்றியதாகத் தெரியவில்லை.

ஒன்றரை ஆண்டுகளில் கிடைக்காத அரச மரியாதைகள் உகண்டாவில் கிடைத்தபோது, மகிந்த ராஜபக்ச குளிர்ந்து போனார் என்றே சொல்ல வேண்டும். அதுபோலவே, முசெவேனியும், மகிந்தவை வைத்து, தனக்கு ஆசியாவிலும் செல்வாக்கு இருக்கிறது என்று காட்டியிருக்கிறார். மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம், இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமைந்திருக்கிறது. இலங்கையின் இராஜதந்திரத் தொடர்புகளில், இருக்கும் குறைபாட்டை மட்டும் இது வெளிக்காட்டவில்லை. மகிந்த ராஜபக்சவுக்கு வெளியுலகிலும் சில இறுக்கமான  தொடர்புகளும் உறவுகளும் இருக்கின்றது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது. தேவேளை, முசெவேனி, மகிந்தவைத் தனது பலத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருப்பது,

மகிந்த ராஜபக்சவுக்கு பலத்தைச் சேர்ப்பதாக இருக்காது.ஏனென்றால், ஏற்கனவே இருவருமே மேற்குலகினது எதிர்ப்பைச் சந்தித்தவர்கள். மகிந்த

ராஜபக்ச ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதற்கு மேற்குலகம் முக்கிய காரணியாக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *